விராட் கோலியை கடந்து டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் – விவரம் இதோ

Malan-1
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி. இந்த தொடரின் மூலம் இங்கிலாந்து அணி டி20 தரவரிசை பட்டியலில் பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. அணிகளின் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியும் 275 புள்ளிகளை தான் பெற்ற இருக்கிறது.

eng

- Advertisement -

ஆனால் கடைசியாக இங்கிலாந்து அணி தான் வெற்றி பெற்றிருந்தது. மேலும் மொத்த புள்ளிகளும் இங்கிலாந்து அணிக்கு தான் அதிகம். அதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 266 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை போன்ற ஆணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன.பேட்டிங் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் டேவிட் மாலன் முதல்முறையாக முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இரண்டாவது போட்டியில் அரைசதமும் மூன்றாவது போட்டியில் 99 ரன்களை அடித்திருந்தார்.

malan 2

அதனைத் தாண்டி இந்த ஆட்டத்தின் மூலம் முதலிடத்தை பிடித்திருக்கிறார். அதே நேரத்தில் இதுவரை டி20 போட்டிகளில் யாரும் எட்டிடாத புள்ளிகளை பிடித்திருக்கிறார். இதுவரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் அதிகபட்சமாக 900 புள்ளிகளை எடுத்திருந்தார். தற்போது டேவிட் மாலன் 915 புள்ளிகளைப் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் ஆரோன் பின்ச் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

malan

மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்தபோது கூட 900 புள்ளிகளை கடந்தது இல்லை. ஆனால் இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி வீரரான இந்த புள்ளிகளை கடந்து அசத்தியுள்ளார். பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் முதல் இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

Advertisement