குல்தீப் & புவனேஸ்வர் குமாரை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்..! – இவர்கள் வேணுமென்றே செய்கிறார்கள்..! என்ன தெரியுமா..?

willey
Advertisement

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. முதலில் டி20 தோவாங்கப்ட்ட நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவை இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லே குற்றம் சாட்டியுள்ளர்.
kuldeep
இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இறுதி வரை புவனேஸ்வர் குமார் வீசினார். புவேனஸ்வர் குமாரின் பந்தை எதிர்கொண்ட டேவிட் வில்லே, புவனேஸ்வர் குமார் தொடர்ந்து ஆப் திசையில் பந்தை வீசுகிறார் என்று கணித்த டேவிட் வில்லே பந்து வீசுவதற்கு முன்பாகவே ஆப் திசையில் நகர்ந்து வந்து ஆடினார். வில்லே தொடர்ந்து பந்து வீசுவதற்கு முன்பாகவே இப்படி ஏறி வந்து ஆடியதால் புவனேஸ்வர் குமார் ஒரு கட்டத்தில் ஓடி வந்து பந்து வீசுவதை நிறுத்தி விட்டார்.

இதனால் டேவிட் வில்லேவிற்கும், புவனேஸ்வர் குமாரிற்கும் சற்று மோதல் ஏற்பட்டது. அதே போல இந்த முதல் போட்டியில் 5 விக்கெட்டை எடுத்திருந்த குல்தீப் யாதவும் இரண்டு முறை இதே போன்று ஓடி வந்து பந்து வீசுவதை நிறுத்தினார். இவர்கள் இருவரின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வில்லே கருத்து தெரிவிக்கையில்
dawid
“அவர் (புவனேஷ்வர் குமார்)நான் என்ன செய்கிறேன் என்பதை பார்ப்பதற்காகவே பந்துவீசாமல் நின்றார் என நினைக்கிறேன். இது போல அந்த அணியின் சூழல் பந்து வீச்சாளர்களும் இரண்டு முறை செய்தார்கள். இது என்ன விதி என்று எனக்கு சுத்தமா புரியவில்லை. இது எனக்கு குறிப்பாக பிடிக்கவில்லை. இது ஒரு சிறந்த கிரிக்கெட்டிற்கு அழகல்ல. அவர்கள் அப்படி செய்ததை பற்றி அதிகம் விமர்சிப்பது எனது வேலை அல்ல. தனிப்பட்ட முறையில் நான் அப்படி செய்ய மாட்டேன். ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement