சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் எடுக்கவுள்ள புதிய அவதாரம் – அவரே கூறிய தகவல்

David-Warner
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் முறைப்படி ஓய்வு பெற்றார். இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக 112 போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ள அவர் 8786 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதில் 26 சதங்களும், 37 அரைசதங்களும் அடங்கும். அதேபோன்று பாகிஸ்தான் அணிக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் போதே தான் ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6932 ரன்கள் அடித்துள்ளார்.

இதில் 22 சதங்களும், 33 அரைசதங்களும் அடங்கும். அதை தவிர்த்து டி20 கிரிக்கெட்டிலும் 99 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2894 ரன்கள் குவித்துள்ளார். இப்படி ஆஸ்திரேலியாவிற்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னரின் ஓய்வு ரசிகர்களையும் வருத்தமடைய வைத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் மற்றும் பி.பி.எல் தொடர்களிலும் விளையாடுவதாக அறிவித்த அவர் இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுக்கு பிறகு அடுத்ததாக என்ன செய்யப்போகிறேன்? என்பது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : 35 – 36 வயசாகிடுச்சேன்னு நினைக்காதீங்க.. அதுல இப்போவும் நெருப்பா இருப்பாங்க.. கோலி, ரோஹித்துக்கு கவாஸ்கர் ஆதரவு

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது வர்ணனையாளராக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் ஓய்விற்கு பிறகு நிச்சயம் வர்ணனையாளராக மாறுவார் என்பது தெரிகிறது.

Advertisement