தமிழக வீரரான இவர் எங்கள் அணியில் இருந்து வெளியேறியது ஈடுசெய்ய முடியா ஓரு இழப்பு – வார்னர் வருத்தம்

Warner

ஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

RCBvsSRH

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பிலிப் 32 ரன்களையும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் ஷர்மா மற்றும் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஹா 39 ரன்களையும், ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 26 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வானார்.

holder

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய டேவிட் வார்னர் விஜய் சங்கரின் விலகல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில் : விஜய் சங்கர் எங்கள் அணியில் விளையாதாதது மிகப்பெரிய இழப்பு தான். ஏனெனில் அவர் ஒரு அருமையான ஆல்ரவுண்டர் எங்கள் அணிக்காக சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தியிருந்தார்.

- Advertisement -

shankar

மேலும் இந்த தொடருக்காக அவர் நிறையவே கடின உழைப்பை கொடுத்திருந்தார். இருப்பினும் எதிர்பாராதவிதமாக அவர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.