இந்த வருஷம் நடக்கும்னு எனக்கு தோணல. ரொம்ப கஷ்டம் தான் – டேவிட் வார்னர் வெளிப்படை

Warner
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அடுத்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று சுமாராக கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Cup

கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதன் காரணமாக ஐபிஎல் தொடரும், உலக கோப்பை தொடரும் நடப்பது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் நேரலையில் ரோஹித் சர்மாவிடம் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

- Advertisement -

கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டி நடைபெறாது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர். மேலும் இந்த தொடர் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கிறது என்றும் வார்னர் குறிப்பிட்டிருந்தார்.

warner

கிரிக்கெட்டை போலவே கால்பந்து கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் போன்ற பெரும் விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கால்பந்து தொடரில் மூடிய மைதானங்களில் நடத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. அதுமட்டுமின்றி உலககோப்பை தொடர் இந்த ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதற்கு பதிலாக ஐ.பி.எல் தொடர் நடைபெறவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement