David Warner : எங்கள் அணியில் உள்ள இந்த ஒரு குறையே எங்களின் தோல்விக்கு காரணம் – வார்னர் பேட்டி

நேற்று சன் ரைசர்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி மிக மோசமாக தோல்வி அடைந்தது. ஒரு கட்டத்தில் சன் ரைடர்ஸ் 10 ஓவர்கள் 72 ரங்களுக்கு 1 விக்கெட் என்ற நல்ல நிலைமை

Warner
- Advertisement -

நேற்று சன் ரைசர்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி மிக மோசமாக தோல்வி அடைந்தது. ஒரு கட்டத்தில் சன் ரைடர்ஸ் 10 ஓவர்கள் 72 ரங்களுக்கு 1 விக்கெட் என்ற நல்ல நிலைமையில் இருந்து இறுதியில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

Srh

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணி அடைந்த இந்த மோசமான தோல்வி குறித்து அந்த அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் வார்னர் கூறியதாவது : முதலில் பந்துவீச்சில் டெல்லி அணியை சிறப்பாக சுருட்டினோம். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் எப்போதுமே சிறப்பாக வீசி வருகிறார்கள். ஆனால், பேட்டிங்கில் இதுபோன்ற குறைந்த இலக்கில் நாங்கள் தோற்பது புதிதல்ல.

குறைந்த இலக்கு கொண்ட போட்டிகளில் நாங்கள் விளையாடும்போது துவக்கத்தில் நாங்கள் அதிரடியாக ஆடினாலும் எங்களது அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் அதனை கோட்டை விட்டு அணியையும் தோற்க விட்டுவிடுகின்றனர். மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தால் எங்கள் அணி இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளாது.

Vijay-Shankar

இப்போது மிடில் ஆர்டரில் ஆடும் இளம் வீரர்கள் திறமையானவர்கள் தான் அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களுக்கு பதட்டமான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை புரிந்து ஆடும் அளவிற்கு இன்னும் அனுபவம் கிடைக்கவில்லை என்று வார்னர் தெரிவித்தார்.

- Advertisement -

Bairstow

ஐ.பி.எல் தொடரின் 30 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 45 ரன்களும், காலின் முன்ரோ 24 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டும் அடித்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருகட்டத்தில் 72 ரங்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்த சன் ரைசர்ஸ் அணி 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வியை அடைந்தது. டெல்லி அணி சார்பில் 22 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தது ரபாடா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement