நடராஜன் எப்போது சன் ரைசர்ஸ் அணியில் விளையாடுவார் – டேவிட் வார்னர் கொடுத்த விளக்கம்

Nattu 1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 11 வது லீக் மேட்ச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று சென்னை மைதானத்தில் மோதின. இப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி பெற்று இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இப்போட்டி முடிந்ததும் பேட்டியளித்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், தமிழக வீரரான நடராஜனை பற்றி ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது :

nattu 1

- Advertisement -

நடராஜனுக்கு முழங்காலில் சிறிது பிரச்சனை உள்ளது. அதற்கு அவர் ஸ்கேன் செய்தாக வேண்டும் ஆனால் ஸ்கேன் செய்ய அவர் வெளியே சென்றால் ஐபிஎல்லில் கடைபிடிக்கப்படும் கொரானா விதிமுறைகளின்படி, ஸ்கேன் செய்து முடித்ததும் அவர் ஏழு நாட்கள் தனிமைப் படுத்தப் படுவார். அதனால்தான் அவருக்கு சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, எங்கள் அணியின் ஃபிஸியோவின் மூலமாகவே அவரது உடல்நிலை கவனிக்கப்பட்டு வருகிறது.

எனவேதான் அவருக்குப் பதில் கலீல் அஹமதை அதை அணிக்குள் கொண்டு வந்தோம் என்று கூறினார். ஹைதராபாத் அணிக்கா தான் பங்குபெற்ற முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய நடராஜனை மூன்றாவது போட்டியில் சேர்க்காதது குறித்து சமூக வலைதளங்களில் ஹதராபாத் ரசிகர்கள் விமர்ச்சனம் செய்தனர்.

nattu

இப்போது உண்மையிலேயே நடராஜனுக்கு என்ன பிரச்சனை என்று வார்னர் கூறியதால், நடராஜன் வெகு விரைவில் குணமாகி அணிக்குள் வரவேண்டுமென்று அந்த அணியின் ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.

Khaleel 1

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடராஜனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட கலீல் அஹமத் 4 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement