எவ்ளோ ட்ரை பண்ணிட்டோம். எங்களால் இந்த 2 பேரை கன்ட்ரோல் பண்ண முடியல – வார்னர் வருத்தம்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

srhvsrr

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராகுல் திவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ராகுல் திவாதியா தேர்வானார். இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : அதிர்ஷ்டமின்றி இந்த போட்டியை நாங்கள் இழந்து விட்டோம். ஆனாலும் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழும்.

Tewatia

ராஜஸ்தான் அணியின் இரு வீரர்கள் போட்டியை அப்படியே இறுதிவரை எடுத்துச் சென்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது எங்களால் இயலவில்லை. இருந்தாலும் இந்த போட்டியில் சிறந்த ஆரோக்கியமான சண்டை நிகழ்ந்தது. இந்த வெற்றிக்கு காரணமாக ரியான் பராக் மற்றும் திவாதியாவை குறிப்பிட்டாக வேண்டும்.

- Advertisement -

அவர்கள் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் விளையாடிய அனைத்து ஷாட்களையும் தைரியமாகவும், உறுதியுடனும் விளையாடினார்கள். ரஷீத் கான் ஓவரிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது.

parag

அதுமட்டுமின்றி ராகுல் திவாதியாவிற்கு நாங்கள் விட்ட ஒரு கேட்ச் அவரை ரன் குவிக்கவும் வழி வகுத்தது. இந்த போட்டியில் நாங்கள் செய்த சில சில தவறான முடிவுகளும், பீல்டிங் மிஸ்டேக் ஆகியவை எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தது. இருப்பினும் இந்த போட்டியில் இருந்து பாசிட்டிவான விடயங்களை எடுத்துக் கொண்டு அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement