டாஸ் ஜெயிச்சி முதலில் பேட்டிங் பண்ணது கரெக்ட் தான். ஆனா நாங்க பண்ண இந்த தப்பு தோல்விக்கு காரணம் – வார்னர் வருத்தம்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் (எட்டாவது லீக்) 8 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை குவித்தார். வார்னர் 36 ரன்களையும், சஹா 30 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது.

இந்த சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. துவக்க வீரரான சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் மோர்கன் 29 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி வெற்றி பெற உதவினார் .ஆட்டநாயகனாக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டார்.

morgan

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : என்னுடைய டாஸ் முடிவு இந்த போட்டியில் சரியானது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் எங்களது பலமே டெத் பவுலிங்கில் தான். இந்த மைதானத்தில் நாங்கள் பேட்டிங்கில் வேகம் எடுக்கவில்லை. கொல்கத்தா பவுலர்கள் சரியாக விசியங்களை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றனர்.

- Advertisement -

நான் ஆரம்பித்து எல்லாம் சிறப்பாக தான் இருந்தது இருப்பினும் அவர்களின் பந்துவீச்சு பலமாக இருந்தது. பேட் கம்மின்ஸ் சிறப்பான இடத்தில் வீசினார். மைதானத்தில் சற்று பந்தின் அசைவு இருந்ததால் எங்களால் மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகள் உடன் திரும்பி வந்தும் ரன்கள் இல்லாதது இந்த போட்டியை எங்களிடமிருந்து பறித்தது.

pandey 1

இன்னும் 30 முதல் 40 ரன்கள் அடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். டாப் ஆர்டரில் இன்னும் ரன்களை குவித்து இருக்க வேண்டும். இலக்கு சிறியது என்பதால் எங்களது பவுலர்களால் சரியான இடத்தில் பந்தை வீச முடியவில்லை. நாங்கள் இன்னும் எதிரணிக்கு அழுத்தத்தைத் தர வேண்டும் கொல்கத்தா அணி ஒட்டுமொத்தமாக அவர்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த வெற்றியை அவர்கள் வசப்படுத்தினர் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement