DC vs KKR : என்னதான் நாங்க இந்த மேட்ச்ல ஜெயிச்சிருந்தாலும், எனக்கு திருப்தி இல்ல – டேவிட் வார்னர் அதிருப்தி

David-Warner
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

DC vs KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்து பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிதான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி எளிதில் கொல்கத்தா அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டெல்லி அணியும் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் சார்பாக துவக்க வீரரான கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 21 ரன்கள் குவித்தனர்.

Ishant Sharma

என்னதான் டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து பேசிய டேவிட் வார்னர் அதிருப்தியான சில கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் : ஒரு வழியாக நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் பந்துவீச்சு துறையை பொருத்தவரை எந்தவொரு குறையும் இல்லை .

- Advertisement -

எங்களது அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியது மட்டுமின்றி பவர்பிளே ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி எதிரணியை பெரிய ரன்குவிப்பிற்கு செல்ல விடாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் நாங்கள் பேட்டிங்கின் போது சற்று மோசமாகவே விளையாடினோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளையும் இழந்தோம்.

இதையும் படிங்க : IPL 2023 : 8 பால்ல சோளிய முடிச்ச அவர இன்னும் எதுக்கு டீம்ல வெச்சிருக்கீங்க – ராஜஸ்தான் வீரரை விளாசும் ரவி சாஸ்திரி

நிச்சயம் இந்த பேட்டிங் செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இன்னும் நாங்கள் பேட்டிங் துறையில் முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் இது ஒரு ஓகே கேம் தான் என வார்னர் தனது அதிருப்தியை வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement