IPL 2023 : 8 பால்ல சோளிய முடிச்ச அவர இன்னும் எதுக்கு டீம்ல வெச்சிருக்கீங்க – ராஜஸ்தான் வீரரை விளாசும் ரவி சாஸ்திரி

Ravi-Shastri
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற 26வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ தங்களது 4வது வெற்றியை பதிவு செய்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ போராடி 20 ஓவர்களில் 154/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 51 (42) ரன்களும் கேஎல் ராகுல் 39 (32) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 155 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் 44 (35) ரன்களும் ஜோஸ் பட்லர் 40 (41) ரன்களும் எடுத்து அவுட்டான நிலையில் வந்த சஞ்சு சாம்சன் அவசரப்பட்டு 2 (4) ரன்களில் ரன் அவுட்டானார். போதாக்குறைக்கு ஹெட்மயரும் 2 (5) ரன்களில் அவுட்டானாலும் ராஜஸ்தானுக்கு கடைசி 5 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்ட கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்ததால் வெற்றி கை மேல் இருந்தது.

- Advertisement -

சாஸ்திரி விளாசல்:
ஆனால் அப்போது களமிறங்கிய ரியன் பராக் அதிரடி காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடாமல் 0, 1, 0, 1, 0, 1, 0, 1 என முதல் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து கட்டுக்குள் இருந்த ரன் ரேட் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதே போல தடுமாறிய தேவதூத் படிக்கல் 26 (21) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டான நிலையில் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 15* (12) ரன்கள் மட்டுமே எடுத்த ரியன் பராக் மீண்டும் ராஜஸ்தானின் வெற்றிக்கு உதவாத வகையிலேயே செயல்பட்டார்.

கடந்த 2019இல் அறிமுகமாகி இதுவரை 50 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் கடந்த 5 வருடங்களில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் 3.80 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்து தொடர்ந்து ராஜஸ்தான் கொடுக்கும் வாய்ப்புகளை வீணடிக்கும் அவரைப் போன்றவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் சம்பளமும் 50 லட்சத்துக்கு விளையாடும் ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு கிடைப்பதில்லை என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் 6வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாட வேண்டிய நேரத்தில் முதல் 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த ரியன் பராக் ராஜஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறு அவர் விளையாடுகிறார் என்பதை பலமுறை பார்த்தும் ராஜஸ்தான் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கும் ரவி சாஸ்திரி இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.Ravi-Shastri

“அவர்கள் சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனாலும் அவர்களின் பேட்டிங் வரிசை மிகவும் ஆழமாக இருக்கிறது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய ரியன் பராக் முதல் 8 பந்துகளில் விளையாடிய விதம் போட்டியின் முடிவை மாற்றியது என்று நினைக்கிறேன். அதே போல் எதிர்புறம் படிக்கல் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அவர்கள் விளையாடிய சமயங்களில் ரன்கள் சிங்கிள்களாக மட்டுமே வந்தது. குறிப்பாக அந்த சமயங்களில் விளையாடிய 28 பந்துகளில் அவர்கள் ஒரு பவுண்டரிகளை கூட அடிக்கவில்லை”

“அப்படி பவுண்டரி அடிக்காமல் அவ்வளவு நேரம் நீங்கள் விளையாடினால் தோல்வியை அழைக்கிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக என்ன சேசிங் செய்கிறோம் என்பதை அறிந்தும் அவர்கள் இவ்வாறு செயல்பட்டனர். இருப்பிடம் தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் இந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்பார்கள்”

இதையும் படிங்க:IPL 2023 : கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கு விளையாட வாய்ப்பிருக்கு – இளம் மும்பை வீரருக்கு இப்போதே ஆதரவளிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா

“குறிப்பாக தங்களது பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்வதற்கான பாடத்தை ராஜஸ்தான் கற்றிருப்பார்கள். ரியன் பராக்கிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டும் அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை அவர்கள் பார்த்திருப்பார்கள். வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அவர்கள் அந்தப் போட்டியை வென்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement