IPL 2023 : கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கு விளையாட வாய்ப்பிருக்கு – இளம் மும்பை வீரருக்கு இப்போதே ஆதரவளிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. முன்னதாக கடந்த வருடம் முதல் 6 போட்டிகளில் தோற்ற முதல் அணியாக மோசமான சரித்திர சாதனை படைத்து புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து அவமானத்திற்குள்ளான மும்பைக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா மட்டுமே ஆறுதலாக அமைந்தார் என்றே சொல்லலாம்.

SKY tilak Varma

- Advertisement -

ஏனெனில் கடந்த சில வருடங்களாக உள்ளூர் அண்டர்-19 அளவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் 1.70 கோடிக்கு மும்பை அணியில் வாங்கப்பட்ட அவர் 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் தக்க வைக்கப்பட்ட அவர் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 214 ரன்களை 53.50 என்ற சராசரியிலும் 158.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து முந்தைய சீசனை விட அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

ரோஹித் நம்பிக்கை:
குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 48/4 என தடுமாறிய மும்பையை 84* (46) ரன்கள் விளாசிய அவர் தனி ஒருவனாக தூக்கி நிறுத்தினார். அதிலும் குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் லெஃப்ட் ஹேண்ட் தோனியை போல அவர் பறக்க விட்ட ஹெலிகாப்டர் சிக்ஸர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Tilak Varma

அதே போல ஹைதராபாத்துக்கு எதிரான சமீபத்திய போட்டியிலும் 37 (17) ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றியில் பங்காற்றிய அவர் நல்ல டெக்னிக்கை பயன்படுத்தி தொடர்ச்சியாக ரன்களை குவித்து மும்பையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா போல தங்களுடைய அணிக்கு விளையாடி வருவதாக மும்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் அழுத்தமான சூழ்நிலைகளுக்கு பயப்படாமல் பவுலர்களின் முகத்தை பார்க்காமல் பந்தை மட்டும் பார்த்து அதிரடியாக விளையாடும் திலக் வர்மா விரைவில் மும்பையை தவிர்த்து வேறு அணிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். அதாவது மும்பை நிர்வாகம் நிச்சயமாக திலக் வர்மாவை இப்போதைக்கு வெளியே விடாது என்ற நிலைமையில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்தியாவின் கேப்டனாகவும் இருக்கும் ரோகித் சர்மா மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி ஹைதராபாத் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியது பின்வருமாறு.

“திலக் வர்மாவின் திறமைகளை கடந்த சீசனிலேயே நாங்கள் பார்த்தோம். அவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்பதை அனைவரும் அறிவோம். இந்த வருடமும் அவர் அபாரமாக செயல்பட்டு வருகிறார். அவருடைய பேட்டிங் அணுகு முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக பயப்படாத குணத்தை கொண்டுள்ள அவர் பவுலர்களின் முகத்தை பார்க்காமல் பந்தை பார்த்து அதிரடியாக அடிக்கிறார். இந்த வயதிலேயே இந்த விதத்தில் விளையாடும் அவரைப் போன்ற வீரருக்கு நிச்சயமாக பெரிய பயணம் காத்திருக்கிறது. மேலும் விரைவில் அவர் வேறு அணியில் விளையாடுவதையும் நாம் பார்க்க முடியும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இதையும் படிங்க:DC vs KKR : 128 ரன்களை துரத்த திணறிய டெல்லி, ரோஹித்தின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனையுடன் காப்பாற்றிய வார்னர்

அதாவது 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள திலக் வர்மா ஓரிரு வருடத்திலேயே நல்ல முதிர்ச்சியுடன் பயப்படாமல் அதிரடியாக பேட்டிங் செய்வதால் வருங்காலங்களில் இந்திய டி20 அணியில் விளையாடுவதை பார்க்க முடியும் என்று ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் இந்த சீசனில் இதே போல தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் இந்தியாவின் கேப்டனாகவும் இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலேயே திலக் வர்மா அறிமுகமாவதற்கு வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement