DC vs KKR : 128 ரன்களை துரத்த திணறிய டெல்லி, ரோஹித்தின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனையுடன் காப்பாற்றிய வார்னர்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 28வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. மழையால் தாமதமாக 8.30 மணிக்கு ஓவர்கள் குறைக்கப்படாமல் துவங்கிய அப்போட்டியில் தன்னுடைய முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து துவங்கிய போட்டியில் மழையால் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் எதிர்பார்க்கப்பட்டது போலவே பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. அதை சரியாக பயன்படுத்திய டெல்லி தரமாக பந்து வீசியதால் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறிய கொல்கத்தாவுக்கு லிட்டன் தாஸ் 4 (4) ரன்களில் அவுட்டான நிலையில் கடந்த போட்டியில் சதமடித்த வெங்கடேஷ் ஐயர் இம்முறை டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
இருப்பினும் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் நங்கூரமாக நின்ற போதிலும் எதிர்ப்புறம் கேப்டன் நிதிஷ் ராணா 4 (7) மந்தீப் சிங் 12 (11) நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 6 (8) சுனில் நரேன் 4 (6) என முக்கிய வீரர்கள் அனைவரும் டெல்லியின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். போதாக்குறைக்கு ஜேசன் ராயும் 5 பவுண்டரி 2 சிக்சருடன் போராடி 43 (39) ரன்களில் ஆட்டமிழந்ததால் 100 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தாவை ஆண்ட்ரே ரசல் கடைசி நேரத்தில் அதிரடியை காட்டி 1 பவுண்டரி 4 சிக்சருடன் 38* (31) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

அதனால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா 127 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா, அன்றிச் நோர்ட்ஜெ, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 128 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியை துவங்கினாலும் மறுபுறம் தடுமாறிய பிரித்திவி ஷா மீண்டும் 13 (11) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் மிட்சேல் மார்ஷ் 2 (9), பில் சால்ட் 5 (3) என முக்கிய பேட்ஸ்மேன் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனாலும் மறுபுறம் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடி காட்டிய டேவிட் வார்னர் விரைவாக அரை சதமடித்து வெற்றிக்கு போராடி ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்தார். அந்த பட்டியல்:
1. டேவிட் வார்னர் : 1050*, கொல்கத்தாவுக்கு எதிராக
2. ரோகித் சர்மா : 1040, கொல்கத்தாவுக்கு எதிராக
3. ஷிகர் தவான் : 1029, சென்னைக்கு எதிராக

அவருக்கு மனிஷ் பாண்டே கை கொடுத்ததால் டெல்லி வெற்றி பாதைக்கு வந்த போது 11 பவுண்டரிகளுடன் 57 (41) ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அவுட்டாக்கினார். அடுத்த சில ஓவர்களில் மனிஷ் பாண்டே 21 (23) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த ஆவேஷ் கான் டக் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அக்சர் படேல் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் மெதுவாக பேட்டிங் செய்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் கடைசி ஓவரில் டெல்லிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

குல்வந் கெஜாரியா வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் அக்சர் படேல் டபுள் எடுத்த நிலையில் 2வது பந்தில் நோ-பால் வீசியதை பயன்படுத்தி மீண்டும் டபுள் எடுத்த அவர் 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்து 19* (22) ரன்கள் எடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 128/6 ரன்கள் எடுத்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது.

இதையும் படிங்க: RCB vs PBKS : நான் பவுலர்ஸ் கிட்ட சொன்னது இந்த ஒரு விஷயம் மட்டும் தான். வெற்றிக்கு பிறகு – கேப்டன் விராட் கோலி பேட்டி

குறிப்பாக பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் டேவிட் வார்னர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடியது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா பந்து வீச்சில் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

Advertisement