CSK vs DC : மைதானத்தில் எந்த குறையும் இல்ல. எங்களது தோல்விக்கு இதுவே காரணம் – டேவிட் வார்னர் வருத்தம்

David-Warner
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மதியம் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த தொடரில் ஏற்கனவே டெல்லி அணி ஒன்பதாவது இடத்தை பிடித்து நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் வாய்ப்பினை இழந்த வேளையில் சென்னை அணிக்கு நேற்றைய போட்டி மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.

Warner and Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றிற்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்று குஜராத் அணிக்கு எதிரான முதலாவது குவாலிஃபயர் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 223 ரன்களை குவிக்க பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 146 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

Warner

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி. இன்றைய போட்டியில் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகச்சிறப்பாகவே இருந்தது.

- Advertisement -

இருந்தாலும் பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. துவக்கத்திலேயே விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் பவுண்டரிகளை அடித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணியின் பவுலர்களுக்கு பிரஷர் இருந்திருக்கும். ஆனால் நாங்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலேயே இந்த மோசமான தோல்வியை சந்தித்தோம்.

இதையும் படிங்க : CSK vs DC : பெருசா எதும் பண்ண வேணாம். இதை மட்டும் பண்ணுங்க போதும் – வெற்றிக்கு பிறகு கெத்தாக பேசிய தோனி

இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்ற பாடங்களை வைத்து எங்களது குறைகளை சரி செய்து நிச்சயம் அடுத்த சீசனில் பலமாக திரும்புவோம் என டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement