IND vs AUS : இந்திய அணிக்கு எதிராகவும் நிச்சயம் நாங்க அதை செய்வோம் – டேவிட் வார்னர் ஓபன்டாக்

David-Warner
- Advertisement -

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் (2-0) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியானது தென்னாப்பிரிக்க தொடர் முடிவடைந்த பின்னர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின்போது தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைசதம் அடித்து சாதனை நிகழ்த்திய டேவிட் வார்னர் மீண்டும் பார்மிற்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளர்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரானது நாக்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் இருக்கும் இந்த கிரிக்கெட் மைதாங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆனால் இந்த மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம்.

இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மிகுந்த சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த தொடரை நாங்கள் போராடி வெல்வோம். தற்போது பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. நாதன் லயன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் செல்வோம் என்று உறுதியளித்துள்ளார். அதேவேளையில் இந்திய அணியானது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பின்னர் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கு எதிராக இவர் கடுமையான நெருக்கடியை கொடுப்பார் – சங்கக்காரா வெளிப்படை

அதன் பின்னர் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அந்த தொடரில் இந்திய அணி 2 வெற்றி மற்றும் 1 டிரா செய்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லமுடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement