ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.
அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மணிஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் விழுந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய வார்னர் தனது விக்கெட் விழுந்த விதம் குறித்து வருத்தம் தெரிவித்தார். எனக்கு தெரிந்து நான் இது போன்று அவுட் ஆனது கிடையாது எனது விக்கெட் விழுந்த விதம் மிகவும் ஏமாற்றத்தை தந்தது என்று கூறியிருந்தார்.
164 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடிய சன்ரைசர்ஸ் அணி பெரிதும் நம்பியிருந்த துவக்க வீரரான வார்னரை நம்பி தான் இருந்தது.ஆனால் 6 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக பேர்ஸ்டோ அடித்த பந்தை உமேஷ் யாதவ் கையினால் தடுக்க அந்த பந்து அவரது கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது.
இதனால் அதனை சற்றும் எதிர்பாராத வார்னர் ரன் அவுட் முறையில் வார்னர் அதிர்ச்சியுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அவரது வெளியேற்றத்தை தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சன் ரைசர்ஸ் அணி இறுதியில் தோல்வியடைந்தது குறிப்பித்தக்கது.