நானும் குடிப்பேன். என் குடிப்பழக்கத்தை கைவிட இதுவே காரணம் – வார்னர் ஓபன் டாக்

Warner

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் பால் டேம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி சிறப்பாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடருக்காக இந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கிறார்.

Warner-1

இந்நிலையில் வார்னர் டி20 போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தடைக்குப் பிறகு திரும்பிய வார்னர் சிறப்பாக ஆடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஆஷஸ் தொடரில் அவர் அடித்த 300 ரன்கள் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது.

இந்நிலையில் வார்னர் அளித்த பேட்டியில் : நானும் இளம் வயதில் குடிப்பேன். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் குடிப்பது ஒரு கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதனால் நானும் நிறைய குடிக்க ஆரம்பித்தேன் .அதன் பிறகு சரியான நேரத்தில் என் மனைவி கேண்டீசை நான் பார்த்தேன்.

Warner 1

அவருக்காக ஏதாவது தியாகம் செய்ய நினைத்த போதுதான் அன்று நான் என்னுடைய குடியை கைவிட்டேன். அதிலிருந்து எனக்கு நல்ல திருப்பம் ஏற்பட்டது. மேலும் என்னுடைய வாழ்விலும் சரி கிரிக்கெட் வாழ்வின் சரி அது ஒரு நல்ல திருப்பத்தை கொடுத்தது. இதற்கு என் மனைவி காரணமாக அமைந்தார். அவருடைய ஒத்துழைப்பால் தான் நான் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டேன் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.