நங்கள் வெற்றி பெற்றாலும் இவர் அணியில் இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு – மனம்திறந்த வார்னர்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxipvssrh

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் (97 ரன்கள்) குவித்த பேர்ஸ்டோ தேர்வானார்.

bhuvi

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : புவனேஸ்வர் குமார் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். புவனேஸ்வர் குமார் இல்லாதது எங்களுக்கு மிகவும் வருத்தமான ஒரு விடயமாகும். அவர் விரைவில் நலம் பெற நாங்கள் வாழ்த்துகிறோம். ஏனெனில் எங்கள் அணியில் உள்ள சிறந்த டெத் பவுலர்களில் ஒருவர் அவர்.

Bhuvi 1

அவர் எங்களது அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் சிறப்பாக பந்துவீசி உள்ளார். மேலும் அவர் இல்லாதது எங்கள் அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் அவருக்கு பதிலாக தற்போது ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் புவி காயம் காரணமாக விலகியது எங்களுக்கு மிகவும் வருத்தமான விடயம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement