தடை விதிக்கப்பட்ட வார்னர்…இப்போது என்ன செய்கிறார் தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

warner

கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணையின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களுவமாக சிக்கி கொண்டனர்.

dawid

பால் டேம்பேரிங் எனப்படும் பந்தை சேதபடுத்திய செயலுக்கு பல கிரிக்கெட் ரசிகர்களும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் பந்தை சேதபடுத்திய விவகாரத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுரித்தி வந்தனர்.இதனால் நெருக்கடியில் சிக்கிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அந்த 3 வீரர்களுக்கும் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. மேலும் இந்த விவகாரத்தில் சிக்கிய வார்னர் தான் கிரிக்கெட் டில் மிக பெரிய தவறு இழைத்து விட்டேன் என்று கண்ணீர் மெழுக பேட்டியளித்தார்.

அதே போன்று ஸ்மித்தும் நாங்கள் மன்னிக்க முடியாத குற்றம் செய்து விட்டோம் என்று குறியபோது அனைத்து கிரிக்கேட் ரசிகர்களும் சற்று மனம் வருந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் வார்னர் தற்போது அனைத்தையும் மறந்து விட்டு உல்லாசமாக சொகுசு வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

David

சிட்னி பகுதியில் உள்ள கடற்கரை ஒன்றில் கனவு தனது வீட்டை கட்டி வரும் வார்னர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உல்லாசமாக தொப்பி ஒன்றை அணிந்து கொண்டு உல்லாச வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார் வார்னர்.