ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய சாதனையை படைத்த டேவிட் வார்னர் – விவரம் இதோ

warnerfier
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

kxipvssrh

அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 37 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதனால் பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

Warner

அந்த சாதனையை யாதெனில் நேற்றைய போட்டியில் டேவிட் வார்னர் அடித்த சதம் ஐபிஎல் அரங்கில் அவர் அடித்த ஐம்பதாவது அரைசதமாகும். இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் வரலாற்றில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Warner-1

இவருக்கு முன்பாக அடுத்தடுத்த இடத்தில் விராட் கோலி 42 முறையும், சுரேஷ் ரெய்னா 39 முறையும், ரோகித் சர்மா 39 வரையும், டிவில்லியர்ஸ் 38 முறையும் அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement