தனது 100 ஆவது டி20 போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் படைத்த வினோதமான சாதனை – விவரம் இதோ

Warner
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த வேளையில் அடுத்ததாக தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது பிப்ரவரி 9-ஆம் தேதி ஹோபர்ட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னர் 70 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன் பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 202 ரன்கள் மட்டுமே குவித்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் வினோதமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் படைத்த சாதனையாவது : இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே மூன்று விதமான கிரிக்கெட்டிலும் 100 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து வீரர் ராஸ் டைலர் மற்றும் இந்தியாவின் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான பார்மெட்டிலும் 100 போட்டிகளை விளையாடி இருந்தனர்.

இதையும் படிங்க : இப்படில்லாம் ஆடுனா இந்தியா முடிச்சு விட்ருவாங்க.. இங்கிலாந்து அணியை எச்சரித்த மைக்கேல் வாகன்

இந்நிலையில் டேவிட் வார்னர் இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக இணைந்துள்ளார். அதேபோன்று மூன்று விதமான பார்மெட்டிலும் தனது 100-ஆவது போட்டியில் அரை சதத்திற்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் 200 ரன்களை குவித்த அவர் 100 ஆவது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து தற்போது 100 ஆவது டி20 போட்டியில் 70 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement