இந்த ஒரு விடயத்திற்கு மட்டும் அனுமதி கிடைத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரும் ஐ.பி.எல் நிச்சயம் விளையாடுவோம் – வார்னர் நம்பிக்கை

warnerfier
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 16 அணிகள் கொண்ட டி20 உலகக் கோப்பை தொடரும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஐசிசி தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் திணறி வருகிறது.

Ipl cup

- Advertisement -

ஒருவேளை டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தை பயன்படுத்தி ஐபிஎல் தொடரில் நடத்திவிடலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரிய தலைவர், 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை தொடரை இந்த வருடம் நடத்துவது சாத்தியம் இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டார்.

ஆனால், ஐசிசி இன்னுமும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் வீரருமான டேவிட் வார்னர் கூறியதாவது : டி20 உலக கோப்பை தொடர் நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக ஐபிஎல் தொடர் நடைபெறும். இதனை நாம் உறுதியாகக் கூறுகிறேன்.

அதேபோல் இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள். உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவது குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் அரசு அனுமதி மற்றும் பயணம் செய்வதற்கான அனுமதி மட்டும் இருந்தால் போதும்.

Warner

இது கிடைத்துவிட்டால் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக பங்கேற்பார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன் இவ்வாறு கூறியுள்ளார் டேவிட் வார்னர்.

Advertisement