வீடியோ : ரவுடி பேபி பாடலில் தனுஷ் முகத்தை மாற்றி தன் முகத்தை வைத்து ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்

Warner

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பது மட்டுமின்றி சமூக வலைத்தளத்திலும் அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா வரும் பொழுதெல்லாம் இங்கு பிரபலமாக பார்க்கப்படும் ஒரு சில பாடல்களுக்கு அவர் நடனமாடி வீடியோக்களை வெளியிடும் வழக்கத்தை வைத்துள்ளார்.

warner 1

அப்படி அவர் வெளியிடும் விடீயோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி அவர் இப்படி வெளியிட்ட பல விடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்துள்ளன. அதே போன்று தனது குடும்பத்துடன் இணைந்து நடனமாடி பல பாடல்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே அவர் இப்படி இந்தியாவில் பிரபலமாக இருக்கும் தென்னிந்திய பாடல்களை நடனமாடி வீடியோவாக வெளியிட்டுள்ள வேலையில் தற்போது தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலில் உள்ள தனுஷ் முகத்தை ஃபேஸ் ஆப் மூலம் எடிட் செய்து அதில் அவரது முகத்தை வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிக அளவு வைரலாகி வருகிறது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவினை பகிர்ந்த அவர் இந்த பாடலுக்கு ஒரு பெயரையும் வையுங்கள் என்று ஒரு கேப்ஷனை வைத்துள்ளார். இதுவரை இந்த வீடியோ 32 லட்சம் வியூவ்ஸ்களை கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement