கவலை படாதீங்க நான் சீக்கிரம் போய்டுவேன் – சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தேதியை அறிவித்த வார்னர்

warner
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் கடந்த பல வருடங்களாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா மட்டுமல்லாது இந்தியா போன்ற வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவின் நிரந்தர தொடக்க வீரராக இடம் பிடிக்கும் அளவிற்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

warner 1

- Advertisement -

குறிப்பாக ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட், மேத்தியூ ஹெய்டன் ஆகியோரது ஓய்வுக்கு பின் அவர்கள் விளையாடிய ஓப்பனிங் இடத்தில் அவர்களைப் போலவே அதிரடியாக விளையாடி ரன்களையும் சதங்களையும் விளாசிய அவர் உலக அளவில் புகழ்பெற்றார். அதே போல் ஐபிஎல் தொடரிலும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஹைதராபாத் அணிக்கு வந்த பின் வெளுத்து வாங்கி தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 2016ஆம் ஆண்டு கேப்டனாக கோப்பையையும் வென்று கொடுத்தார்.

அப்படி உச்சத்தை நோக்கி சென்ற அவர் கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஒரு வருடம் தடை பெற்று பின்னடைவை சந்தித்தார். ஆனால் அதிலிருந்து திரும்பிய பின் பழைய பன்னீர்செல்வமாக அசத்த முடியாமல் தடுமாறிய அவர் 2020 ஐபிஎல் சீசனில் முதல் முறையாக ஃபார்மை இழந்து சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதற்கடுத்த வருடம் தடுமாறிய அவரை பாதி சீசனிலேயே கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய ஹைதராபாத் நிர்வாகம் கூல்ட்ரிங்ஸ் தூக்க வைத்து இறுதியில் கழற்றி விட்டு அவமானப்படுத்தியது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

warner

ஓய்வு அறிவிப்பு:
இருப்பினும் அதற்காக மனம் தளராமல் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்று ஆஸ்திரேலியா முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காகவும் அசத்தினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 2 வருடங்களாக சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் இரட்டை சதமடித்து பார்முக்கு திரும்பி பதிலடி கொடுத்த அவர் அடுத்ததாக பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் களமிறங்க உள்ளார்.

- Advertisement -

இருப்பினும் கடந்த சில மாதங்களாகவே பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பெற்ற தடையை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்காமல் அவரை ஆஸ்திரேலியா வாரியம் புறக்கணித்து வருகிறது. அதனால் நான் கிரிமினல் இல்லை என்று வருத்தத்தை தெரிவித்திருந்த அவர் என்னதான் ஃபார்முக்கு திரும்பினாலும் 36 வயதை கடந்து விட்டதால் முன்பு போல் அதிரடியாக விளையாட முடியாமலும் தடுமாறுகிறார்.

Warner

எனவே கேரியரின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள அவர் ஆஸ்திரேலிய வாரியத்தில் தமக்கான ஆதரவு குறைந்ததை கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இப்போதே அறிவித்துள்ளார். தற்போது பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி அணிக்காக விளையாடி வரும் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வருடம் தான் கடைசி வருடமாக அமையலாம். குறிப்பாக 2024 டி20 உலக கோப்பையில் நான் கவனத்தை வைத்துள்ளேன். எனவே அமெரிக்காவில் எனது கேரியரை வெற்றியுடன் முடிப்பது சிறப்பாக இருக்கும். அதே போல் பிக்பேஷ் தொடரில் சிட்னி அணிக்காக இந்த வருடமும் அடுத்த வருடமும் ஒப்பந்தம் செய்துள்ளேன்”

இதையும் படிங்க: அணிக்காக என்னாமா உழைக்கிறாரு, இனிமேல் யாராலும் ராகுல் இடத்தை டச் பண்ணவே முடியாது – வாசிம் ஜாபர் கூறும் காரணம் என்ன

“இது ஆரம்ப காலங்களில் எனக்கு உதவி அவர்களுக்கு நான் திருப்பி செய்ய வேண்டிய நேரமாகும். இருப்பினும் இந்த வருடமே என்னுடைய கேரியரின் முழுமையான கடைசி வருடமாக இருக்கும்” என்று கூறினார். 341 சர்வதேச போட்டிகளில் 16000+ ரன்களை விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவரது இந்த அறிவிப்பை பார்த்து உலகம் முழுவதிலும் உள்ள அவருடைய ரசிகர்கள் சோகமடைவது குறிப்பிடத்தக்கது.

Advertisement