IPL 2023 : அப்டி ஆகிருந்தா மட்டும் பாராட்டவா போறீங்க? ஐபிஎல் விளையாடாதீங்க என விமர்சித்த சேவாக்கிற்கு வார்னர் பதிலடி

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ள 10 அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இருப்பினும் ஆரம்பத்திலேயே ரிசப் பண்ப் காயத்தால் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்பட்ட அந்த அணிக்கு 2016 கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Warner

- Advertisement -

அதனால் வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டும் பேட்டிங்கில் சொதப்பியதால் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக முதல் 5 போட்டிகளில் தோற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே 50% நழுவ விட்டது. குறிப்பாக பேட்டிங் துறையில் டேவிட் வார்னர் வழக்கத்திற்கு மாறாக 56 (48), 37 (32), 65 (55), 51 (47), 19 (13) என முதல் 5 போட்டிகளில் பெரிய ரன்களை எடுத்தாலும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வார்னரின் பதில்:
அதனால் 25 பந்தில் 50 ரன்கள் எடுப்பதைப் போல் அதிரடியாக விளையாட தவறினால் ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் என்று முன்னாள் டெல்லி வீரர் வீரேந்தர் சேவாக் வெளிப்படையாகவே கடுமையாக விமர்சித்தார். ஆனால் உண்மையாகவே அக்சர் படேல் தவிர்த்து பிரிதிவி ஷா, மிட்சேல் மார்ஷ், ரிலீ ரோசவ், ரோவ்மன் போவல் போன்ற எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அனைத்து போட்டிகளிலும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்திய காரணத்தாலே நங்கூரத்தை போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் மெதுவாக விளையாடினார்.

Sehwag

சொல்லப்போனால் கொல்கத்தாவுக்கு எதிரான 6வது போட்டியில் வெறும் 128 ரன்களை சேசிங் செய்யும் போது கூட பிரிதிவி ஷா 13, மார்ஷ் 2, பில் சால்ட் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை கொடுத்தனர். ஆனாலும் அப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 11 பவுண்டரியுடன் 57 (41) ரன்களை 139.02 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த காரணத்தாலும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தாலும் அக்சர் படேல் 19* (22) ரன்கள் எடுத்த உதவியுடன் கடைசி ஓவரில் டெல்லி போராடி முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் டெல்லி இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்கள் விழுந்ததால் நங்கூரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மெதுவாக விளையாடியதாக விமர்சனங்களுக்கு டேவிட் வார்னர் பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இதர பேட்ஸ்மேன்களில் ஒருவராக தாமும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியிருந்தால் ஐபிஎல் விளையாட வராதீர்கள் என்று விமர்சித்ததை விட கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கும் என்றும் வார்னர் கூறியுள்ளார்.

David-Warner

இது பற்றி முதல் வெற்றியை பதிவு செய்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே நான் வழக்கத்திற்கு மாறாக விளையாடுகிறேன் என்று ஏராளமான விமர்சனங்களும் பரிந்துரைகளும் இருந்து வருகின்றன. ஆனால் ஆரம்பத்திலேயே தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்த விட்டோம். அப்போது நான் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருந்த நான் என்ன செய்ய முடியும்? அந்த சமயத்தில் நீங்கள் எதுவும் செய்ய முடியாது”

இதையும் படிங்க:IPL 2023 : அவரது கேப்டன்ஷிப் பற்றி தெரிஞ்சுக்கணும், மும்பை இல்லாமல் போனால் அந்த ஐபிஎல் டீம்ல விளையாட ஆசை – சுனில் கவாஸ்கர்

“எனவே நீங்கள் சற்று சாதுரியமாக பொறுப்புடன் விளையாட வேண்டும். குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நானும் முன்கூட்டியே அவுட்டாகியிருந்தால் அனைவரும் என்னை மேலும் மோசமாக விமர்சித்திருப்பார்கள் என்று நான் கியாரண்டியாக சொல்வேன். எனவே இந்த போட்டி இவ்வாறு தான் செல்லும்” என்று கூறினார். அதாவது அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முயற்சித்து மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒருவராக தாமும் குறைவான ரன்னில் அவுட்டாகியிருந்தால் மட்டும் விமர்சகர்கள் பாராட்டப் போவதில்லை என்று தெரிவிக்கும் வார்னர் போட்டியின் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடுவதாக பதிலளித்துள்ளார்.

Advertisement