இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இவரது பந்துவீச்சை எதிர்கொள்வது நரக வேதனைக்கு கொடுக்கும் – வார்னர் ஓபன் டாக்

Warner
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரிய பாதிப்பிற்கு பின்னர் சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

broad

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிராட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் சேர்க்கப்பட்டார். தன்னை சேர்த்தற்கான சரியான பலனைத் தந்த பிராட் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசினார்.

அதுமட்டுமன்றி மூன்றாவது போட்டியில் கடைசி விக்கெட்டை வீழ்த்தும் போது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் பிராட் படைத்தது குறிப்பிடத்தக்து. இந்நிலையில் தற்போது அவரை புகழ்ந்து பேசிய ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் கூறுகையில் :

broad

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரை சேர்க்காதது ஏன் என்று புரியவில்லை. ஏனென்றால் கடந்த ஒன்றரை வருடங்களாக பிராடு சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் அடுத்து இரு போட்டிகளில் பந்துவீச வாய்ப்பு கொடுத்த போது அசத்திவிட்டார். இங்கிலாந்து மண்ணில் எப்படி பேட்ஸ்மேன்களை வீழ்த்த வேண்டும் என்ற அனைத்து வித்தைகளையும் கற்று அறிந்தவர் பிராடு.

broad 1

இடது கையை பேட்ஸ்மென்கள் அவரது பந்து வீச்சை எதிர்கொள்வதே நரக வேதனையாக இருக்கும் என வார்னர் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பத்து இன்னிங்ஸ்களில் ஏழு முறை வார்னரை பிராட் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement