டெல்லி அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – டேவிட் வார்னர் புகழாரம்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 வது லீக் போட்டி நேற்று டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணிக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

bairstow

- Advertisement -

துவக்க வீரர்களான வார்னர் 45 ரன்களும், பேர்ஸ்டோ 53 ரன்கள் அடித்து சிறப்பான துவக்கம் அளித்தனர். அதன்பிறகு மனிஷ் பாண்டே வழக்கம்போல் 3 ரன்களில் ஏமாற்ற இந்த போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட வில்லியம்சன் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ரன் குவிப்புக்கு காரணமாக திகழ்ந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் என்ற நல்ல ரன்களை குவித்தது.

அதன்பிறகு 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பாக தவான் 34 ரன்களும், ரிஷப் பண்ட் 28 ரன்களும் அடித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக ரசித்கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Rashid

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : நாங்கள் இன்று டாசை இழந்தாலும் போட்டியை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மிட்சல் மார்ஷ் காயமடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவை உள்ளே கொண்டு வந்தோம். அவரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நாங்கள் டெத் பவுலிங்கில் சிறப்பாக பந்து வீச பயிற்சியை தொடர்ச்சியாக எடுத்து வருகிறோம். எங்களது பவுலர்கள் இன்று சிறப்பாக பந்து வீசினார்கள். எந்த இடத்தில் எந்த பவுலரை அழைத்தாலும் அவர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

srh

பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் அதிர்ஷ்டம் எங்களுக்கு தேவை. ஏனெனில் எங்கு அடித்தாலும் பந்து சரியாக பீல்டரிடம் செல்கிறது. எங்களது பேட்ஸ்மேன்கள் ரன்னிங் பிட்வீன் த விக்கெட் நன்றாக ஓடுகின்றனர். மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் ரன்னிங் என்பது சிரமமாகவே உள்ளது. நான் சில நல்ல ஷாட்டுகளை அடித்தேன். ஆனாலும் அது சரியாக பீல்டரின் கைகளுக்கு போகிறது என்று அணி ஆய்வாளரிடம் கூறினேன் என்று வார்னர் கூறினார். மேலும் இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம் பந்துவீச்சாளர்கள் என்று அவர் பெருமையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement