குடிச்சிட்டு சண்டை போட்டதால் தான் வார்னரை வீட்டுக்கு அனுப்பினோம் – முன்னாள் வீரர் வெளியிட்ட பின்னணி

Warner
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து உச்சகட்ட பரபரப்பில் எட்டியுள்ளது. இந்த தொடரில் குல்திப் யாதவ் போன்ற ஒருசில வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு இழந்த தங்களது பார்மை இருமடங்கு மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் தங்களை அவமானப்படுத்தி கழற்றிவிட்ட முன்னாள் அணியை பழிக்கு பழி வாங்கி தாங்கள் இன்னும் முடிந்து போகவில்லை என்று நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த பல வருடங்களாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2014 முதல் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து 2016இல் கேப்டனாக அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்தார்.

warner 1

ஆனாலும் 2021இல் முதல் முறையாக ரன்கள் அடிக்க தவறினார் என்பதற்காக பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய அந்த அணி நிர்வாகம் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்தும் நீக்கியது. அத்துடன் கூல்டிரிங்ஸ் தூக்க வைத்து பெஞ்சில் அமர வைத்து அவமானப் படுத்தியது. இறுதியில் கழற்றி விட்ட அந்த அணி நிர்வாகத்திற்கு துபாயில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்ற டி20 உலக கோப்பை 2021 தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் தொடர் நாயகன் விருதை வென்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

டெல்லியில் வார்னர்:
அதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் 6.5 என்ற நல்ல தொகைக்கு வாங்கிய டெல்லி அணி நிர்வாகம் தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 313 ரன்களை 52.17 என்ற சூப்பரான பேட்டிங் சராசரியில் 154.95 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் சக்கைப்போடு போட்ட அவர் 92* ரன்கள் விளாசி டெல்லியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்று தனது முன்னாள் அணியை பழிக்கு பழி வாங்கினார்.

David Warner vs SRH 2

இதுவரை 158 போட்டிகளில் 5762 ரன்களை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளார். இப்படி ஒரு ஜாம்பவானுக்கு நிகராக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தனது ஐபிஎல் பயணத்தை முதல் முறையாக கடந்த 2009-ஆம் ஆண்டு தற்போது இடம் பெற்றுள்ள டெல்லி அணியில் தான் தொடங்கினார்.

- Advertisement -

பார்ட்டி, சண்டை:
அப்போது டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயருடன் முன்னாள் இந்தியா அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கேப்டனாக இருந்தார். அந்த சமயத்தில் இளம் வீரராக காலடி வைத்த டேவிட் வார்னர் பயிற்சியை விட பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதையும் சக அணி வீரர்களிடம் சண்டை போடுவதையும் வழக்கமாக வைத்திருந்ததாக அப்போதைய கேப்டனாக இருந்த சேவாக் தற்போது தெரிவித்துள்ளார்.

warner 2

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் நான் அதிருப்தியில் இருந்த ஒரு சில வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர். ஏனெனில் அவர் பயிற்சி எடுத்து சிறப்பாக போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் பார்ட்டியிலும் கொண்டாட்டத்திலும் அதிகம் ஈடுபட்டார். குறிப்பாக முதல் வருடத்தில் அணியில் இருந்த ஒருசில வீரர்களுடன் அவர் சண்டை போட்டதால் கடைசி 2 போட்டிகளுக்கு முன்பாக அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்”

- Advertisement -

“எனவே ஒருசில நேரங்களில் ஒரு சிலரை அணியிலிருந்து வெளியேற்றுவது அவர்களுக்கு பாடமாகும். மேலும் அவர் புதியவர் என்பதால் அணிக்கு நீங்கள் மட்டும் முக்கியமானவர் அல்ல என்பதை காட்டுவது அவசியமாகும். அவரின் இடத்தில் வேறு சில வீரர்களும் சிறப்பாக விளையாடி போட்டியை வெற்றி பெற்று தருபவர்களாக இருந்தனர். அதுதான் இறுதியில் நடந்தது. அவரை அணிக்கு வெளியேற்றிய போட்டிகளிலும் நாங்களும் வெற்றி பெற்றோம்” என்று கூறினார்.

Warner

அதாவது ஒரு அணியில் யாராக இருந்தாலும் முதலில் நன்னடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும் அதுதான் வெற்றிக்கான முதல் படி என்று தெரிவிக்கும் வீரேந்திர சேவாக் அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அணியில் இருந்து வெளியேற்றுவதில் தவறில்லை என்று பேசினார். அந்த வகையில் பயிற்சிக்கு ஒழுங்காக வராமல் இதர வீரர்களுடன் சண்டை போட்ட வார்னரை 2009 ஐபிஎல் தொடரின் கடைசி 2 போட்டிகளில் அணியில் இருந்தே வெளியேற்றியதாக சேவாக் தெரிவித்தார்.

இதையும் படிங்க : எல்லாத்தையும் செய்த பிறகும் எனக்கு அந்த மரியாதை கிடைக்கல – ஐ.பி.எல் தொடர் குறித்து கெயில் ஷாக்கிங் பேட்டி

மேலும் அவர் அணிக்குள் இல்லாமல் எஞ்சிய 2 போட்டிகளில் வென்று காட்டியதாக கூறிய சேவாக் ஹைதராபாத் அணியில் கூட டேவிட் வார்னர் அதுபோல் நன்னடத்தையின்றி நடந்து கொண்டிருக்கலாம் அதனாலேயே அவரின் இடமும் பறி போயிருக்கலாம் என்றும் சந்தேகத்துடன் பேசினார்.

Advertisement