- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியிடம் இதை தான் பேசினேன்.. அவரால் அது முடியாதுன்னு சொல்ல காரணமே இல்லை.. வார்னர் பேட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. அதனால் ஒயிட்வாஷ் அவமானத் தோல்வியைத் தவிர்த்த இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்கள் முக்கிய பங்காற்றினார்.

அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி 74* ரன்கள் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த டக் அவுட்டான அவர் 3வது போட்டியில் அசத்தியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடியும் கொடுத்தார்கள்.

- Advertisement -

பேசியது என்ன:

முன்னதாக அப்போட்டி துவங்குவதற்கு முன் விராட் கோலியை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நேரில் சந்தித்து பேசினார். சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் எதிரெதிர் அணிகளில் விளையாடிய அவர்கள் நாளடைவில் நண்பர்களாக மாறினர். எனவே நட்பு ரீதியாக விராட் கோலியை சந்தித்த வார்னர் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் விராட் கோலியிடம் பேசியது குறித்து டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார். அத்துடன் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலியால் விளையாட முடியாது என்று சொல்வதற்கான காரணம் இல்லை என்றும் வார்னர் தெரிவித்துள்ளார். இது பற்றி வார்னர் தெரிவித்தது பின்வருமாறு. “விராட் கோலியை நேரில் சந்தித்து கை கொடுத்து கட்டி அணைத்தேன்”

- Advertisement -

வார்னர் ஆதரவு:

“குடும்பம் எப்படி செல்கிறது என்பதைக் கேட்டதுடன் அவரது கிரிக்கெட்டைப் பற்றியும் கேட்டறிந்தேன். தற்போது சூப்பர் ஃபிட்டாக தெரியும் அவரால் 50 வயது வரை விளையாட முடியும். உங்களிடம் வெற்றிக்கானப் பசியும் தொடர்ந்து விளையாடுவதற்கான ஆசையும் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் 2027இல் விளையாட விரும்பும் விராட் கோலி அதற்கான மனநிலையைக் கொண்டுள்ளார்”

இதையும் படிங்க: இந்தவொரு விடயம் போதாதா? அடுத்த வேர்ல்டுகப்புக்கு அவங்க 2 பேருமே ரெடி – சுனில் கவாஸ்கர் கருத்து

“எனவே அவரால் முடியாது என்று சொல்ல எந்தக் காரணமும் இல்லை. கிரிக்கெட்டில் ஃபிட்டாக இருக்கும் வீரர்களில் ஒருவரான அவர் நல்ல தந்தையாகவும் கணவராகவும் இருக்கிறார். எனவே அவரால் விளையாட முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இவை அனைத்தும் நீங்கள் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறீர்களா? உலகக் கோப்பைக்குச் செல்ல தயாராகிறீர்களா? என்பதைப் பொறுத்தது. என்னைப் பொறுத்த வரை அதை செய்வதற்கு தயாராக உள்ள அவரது மனநிலையில் சந்தேகம் இல்லை” என்று கூறினார்.

- Advertisement -