டோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து அனிருத்தின் “கொலவெறி பாடலுக்கும் டிக் டாக்” செய்த வார்னர் – வைரலாகும் வீடியோ

Warner

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பினை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகமே இன்று ஸ்தம்பித்து நிற்கிறது மக்கள் இந்த பேரிடரின் பாதிப்பில் நிம்மதி இழந்து இருக்கின்றனர். பொருளாதார ரீதியில் அனைத்து நாடுகளுக்கும் பெரிய அடி விழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கால்பந்து என அனைத்து விதமான போட்டிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எனவே தற்போது இவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்தக் ஓய்வு நேரத்தை சமூக வலைதளம் மூலமாக கழித்து வருகின்றனர்.

அப்படி சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவது. வீடியோ செய்வது மற்றும் இன்ஸ்டா லைவ் பேசுவது என்று அனைவரும் ஒவ்வொரு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு தனது பங்கிற்கு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே அதிக அளவில் வீடியோக்களை டிக்டாக் செய்து பகிர்ந்து வருகிறார்.

குறிப்பாக டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பாடல்களுக்கு நடனமாடி அதனை வெளியிட்டு வந்த வார்னரின் அனைத்து வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ் பாடலான “ஒய் திஸ் கொலவெறி” பாடலை கையில் எடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் அவர் பகிர்ந்த சில மணி நேரத்திலேயே வைரலானது.

- Advertisement -

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் “ஒய் திஸ் கொலவெறி பாடல்” உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்தது என்றே கூறலாம். இந்தப் படத்தின் மூலமாகவே அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வார்னர் வெளியிட்டுள்ள இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.