போர்டில் நல்லா தெரியுதா? மிட்சேல் ஜான்சனுக்கு வார்னர்.. பாகிஸ்தானை பந்தாடி மறைமுக பதிலடி

David Warner Johnson
- Advertisement -

தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு பெர்த் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டிகள் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாள் முடிவில் 346/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி தம்முடைய 26வது டெஸ்ட் சதத்தை அடித்து 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் உஸ்மான் கவஜா 41, ஸ்டீவ் ஸ்மித் 31, டிராவிஸ் ஹெட் 40 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்திய நிலையில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமல் 2* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

ஜான்சனுக்கு பதிலடி:
முன்னதாக இந்த தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சமீபத்தில் அறிவித்தார். 8000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் சமீப காலங்களில் தடுமாற்றமான ஃபார்மில் இருப்பதால் டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் விடை பெறலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னர் ஹீரோவை போல இத்தொடரில் வழி அனுப்புவதற்கான அனுமதியை கொடுத்தது ஏன் என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் சமீப காலங்களாக சுமாரான ஃபார்மில் தடுமாறுவதால் அதிரடியாக நீக்கப்பட வேண்டிய டேவிட் வார்னருக்கு இத்தொடரில் வாய்ப்பு கொடுத்தது ஏன் என்றும் தேர்வுக்குழுவிடம் ஜான்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் அபாரமான சதமடித்த டேவிட் வார்னர் அதை காற்றில் தாவிப் பறந்து சூப்பர்மேன் போல பஞ்ச் கொடுத்து வெறித்தனமாக கொண்டாடினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி ஸ்கோர் போர்டில் பெரிய ரன்களை குவித்து தன்னுடைய தரத்தை காண்பித்துள்ளது மகிழ்ச்சியை கொடுப்பதாக ஜான்சனுக்கு போட்டியின் முடிவில் டேவிட் வார்னர் மறைமுகமாக பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஹெய்டன், கிளார்க்கை முந்திய வார்னர்.. லெஜெண்ட் லாராவை முந்தி பாகிஸ்தானை வெளுப்பதில் புதிய சாதனை

“ஆஸ்திரேலியாவுக்காக மற்றுமொரு சதமடித்தது மகத்தான உணர்வை கொடுக்கிறது. நாங்கள் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்படுவதற்காக போர்டில் தேவையான ரன்களை குவிக்க வேண்டும். உங்கள் மீதான விமர்சனங்கள் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இருப்பினும் விமர்சனங்கள் இருக்கும் போது நீங்கள் சிறப்பாக வேலை செய்தால் தலையை உயிரே நிமிர்த்தி நடக்கலாம். இது போன்ற சமயங்களில் ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் குவித்து விமர்சனங்களை அமைதிப்படுத்துவதை விட வேறு நல்ல செயல் முடியாது” என்ற கூறினார்.

Advertisement