பாகிஸ்தானுக்கு எதிராக வெறியாட்டம் ஆடிய வார்னர். முச்சதம் அடித்து அசத்தல் – இமாலய சாதனை விவரம் இதோ

Warner-1
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

Aus

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெயின் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வரும் தொடக்க வீரராக வார்னர் மற்றும் பர்ன்ஸ் களம் இறங்கினார்கள். 4 ரன்கள் எடுத்திருந்தபோது பர்ன்ஸ் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு அவருடன் இணைந்த லபுசாக்னே சிறப்பாக ஆடினார். இவர்கள் இருவரது நிதானமான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை குவித்து இருந்தது.

இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். இந்நிலையில் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் லபுசாக்னே 162 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் ஒருபக்கம் தொடர்ந்து நிலைத்து நின்று அதிரடியாக ஆடி வந்த வார்னர் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். இரட்டை சதம் அடித்து அதனை தாண்டி முச்சசத்தை வேகவேகமாக நெருங்கினார்.

Warner

பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சாளர்களை மாற்றியும் வேலைக்கு ஆகவில்லை சிறப்பாக விளையாடிய வார்னர் முச்சதம் விளாசினார். இதுவே டெஸ்ட் போட்டியில் அவரது முதல் முச்சதமாகும். மேலும் முச்சதம் அடித்த ஏழாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் மேத்யூ ஹைடன் (380) அடுத்து இரண்டாவது இடத்தில் 335* வார்னர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement