ரோஹித் ஷர்மா மரண அடி..! 2019 உலக கோப்பை இந்த அணி தான் வெல்லும்..! – வார்னர் ட்விட்டரில் பதிவு..!

warner
Advertisement

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தனது முதல் ஒரு நாள் போட்டியில் அற்புதமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.
warner
ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் பார்ட்டியுள்ளார். நேற்று (ஜூலை 12) ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவருக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சமீபத்தில் இந்திய அணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ” ஒரு நாள் போட்டியில் சிறந்த அணியாக இருக்கும் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு இது ஒரு சிறப்பான தொடராக இருக்கும் என்று கூறலாம் .அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை மிகவும் சுவாரசியமாக இருக்கும். ” என்று பதிவிட்டுள்ளார்.


சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வாஷ் அவுட் செய்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இன்னும் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால், சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படும்.

- Advertisement -
Advertisement