David Warner : தன்னால் காயமடைந்த வீரருக்கு சிறப்பு பரிசு அளித்த – வார்னர்

இந்திய அணியுடனான போட்டிக்காக ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாக வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது

Warner
- Advertisement -

இந்திய அணியுடனான போட்டிக்காக ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாக வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வார்னர் பலமான ஷாட்டுக்களை தொடர்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தார். அப்பொழுது வலைப்பயிற்சியில் அவருக்கு பந்துவீசிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பந்துவீச்சாளர் ஜெய்கிஷன் வார்னருக்கு மெதுவான பந்தினை வீச அப்போது அதையும் பலமாக அடித்தார் வார்னர்.

வார்னர் அடித்த அந்த பந்து நேராக சென்று பந்து வீச்சாளரின் தலையில் தாக்கியது இதனால் நிலைகுலைந்த பந்துவீச்சாளர் மயங்கி மைதானத்தில் விழுந்தார். இதனைக் கண்ட வார்னர் பந்து வீச்சாளரின் அருகே சென்று கலங்கியபடி கீழே உட்கார்ந்து அவரைத் தேற்றினார் பிறகு சிறிது நேரம் பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் பயிற்சி சிறிது நேரம் கழித்தே வந்து கலந்துகொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் தன்னால் அடிப்பட்டு மருத்துவமனை சென்று திரும்பிய அந்த பவுலரை இன்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன் சந்தித்த வார்னர் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்தார்.

Warner

அதன்படி ஆஸ்திரேலியாவின் அணி வீரர்கள் அனைவரும் கையொப்பம் இருக்கும் ஒரு டீசர்ட்டை அவருக்கு பரிசாக அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட ஜெய்கிஷன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement