கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்ல. அணியில் இருந்தும் நீக்கப்பட்ட நட்சத்திர வீரர் – இவருக்கா இந்த நிலைமை ?

SRH
- Advertisement -

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இனி நடக்க இருக்கும் ஐதராபாத் அணி போட்டிகளுக்கு கேன் வில்லியம்சன் தான் தலைமை தாங்க போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு டேவிட் வார்னர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. அதேசமயம் மறுமுனையில் மிக மோசமாக அணியை தலைமை தாங்கி 6 போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுத் தந்துள்ளார். 5 போட்டிகளில் மிகவும் மோசமாக தோல்வியை பற்றி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது.

Warner

இதன் காரணமாகவே இனி நடக்க இருக்கும் போட்டிகளை கருத்தில் கொண்டு ஹைதராபாத் அணி இந்த திடமான முடிவை எடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கேன் வில்லியம்சன் சிறப்பாக தலைமை தாங்குவார் அவரிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது நல்லதுதான் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். கேன் வில்லியம்சன் 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தலைமை தாங்கிய முதல் தொடரிலேயே ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் விளங்கி, ஆரஞ்சு கேப்பையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் ஹைதராபாத் அணி இதுவரை வார்னர் சிறப்பாக விளையாடி அணியை வழிநடத்தியதற்க்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது கேப்டன் பதவியை மட்டும் அல்லாமல், அணியில் இருந்து அவரை இனி வரும் போட்டிகளில் தூக்க போகிறார்கள் என்று நாம் உணரலாம்.

warner 1

ஒருவேளை வார்னர் அணியிலிருந்து தூக்கப்பட்டு விட்டால், கேன் வில்லியம்சன், ரஷிட் கான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் முகமது நபி ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். ஜேசன் ராய் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிக அற்புதமாக விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இனிவரும் போட்டிகளில் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் களமிறங்குவார் என்று தெரிகிறது.

Warner

மேலும் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் வார்னரை அந்த அணி கைவிடப் போவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இது வார்னர் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஹைதராபாத் அணிக்காக ஒற்றை வீரனாக எத்தனை ஆண்டுகள் விளையாடியவருக்கு இப்படிப்பட்ட பரிசா என வார்னர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஹைதராபாத் அணியை திட்டி தீர்த்த வண்ணம் இருக்கின்றன.

Advertisement