- Advertisement -
உலக கிரிக்கெட்

தெலுங்கு பாட்டு, ஹிந்தி பாட்டை தொடர்ந்து கமலஹாசனின் தமிழ் பாடலுக்கும் நடனமாடிய வார்னர்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கி இருக்கும் இவ்வேளையில் கிரிக்கெட் போட்டிகளிலும் உலக அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வரும் அவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அதிரடி வீரரான டேவிட் வார்னர் ரசிகர்களுக்கு தனது கருத்தினை வழங்குவது மட்டுமின்றி டிக்டாக்கில் தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் ஜாலியாக நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் பாலிவுட் பாடல் மற்றும் தெலுங்கில் புட்ட பொம்மா பாடல் என இந்திய இசைக்கு அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி வீடியோவை வெளியிட்டு வந்தார்.

- Advertisement -

தற்போது 1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் சிவாஜி, கௌதமி, ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலின் இசைக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் நடனமாடியுள்ளார்.

இந்த பாடலின் மெட்டுக்கு டேவிட் வார்னர் ஆடியுள்ள நடனமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை வார்னர் டிக் டாக் மட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வார்னரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by