ஸ்மித்தை தொடர்ந்து அமர்க்களமாக இந்தியா வந்தடைந்த டேவிட் வார்னர்

Warner
- Advertisement -

சென்ற ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் ஆன டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓராண்டு அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக எந்த கிரிக்கெட் தொடர்களிலும் அவர்கள் பங்கேற்கவில்லை கடைசியாக வங்கதேச பிரீமியர் லீக்கில் கலந்து கொண்டு விளையாடினார்கள். பிறகு அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் துவங்க உள்ள ஐபிஎல் போட்டி தொடரில் இருவரும் விளையாட உள்ளனர்.

- Advertisement -

இதற்காக நேற்று ஸ்மித் ராஜஸ்தான் அணியுடன் இணைந்தார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அவரின் வருகையை ஒட்டி சன்ரைசர்ஸ் அணி நிர்வாகிகள் அவரை உற்சாகமாக விமான நிலையத்தில் வரவேற்று ஹைதராபாத் மைதானத்தில் பத்திரமாக சேர்த்தனர். நேற்றிலிருந்து வார்னர் தனது பயிற்சியும் ஆரம்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement