தோல்வி எதிரொலி : ரிட்டையர்மென்டை அறிவிக்கப்போகும் டேவிட் வார்னர் – ஓ இதுதான் காரணமா?

David-Warner
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து நடப்புச் சாம்பியனாக தற்போது சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி நிச்சயம் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூப்பர் 12 சுற்றின் முடிவிலேயே துர்திஷ்டவசமாக வெளியேறியது.

warner 1

- Advertisement -

அப்படி ஆஸ்திரேலியா அணி வெளியேறியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது அணியில் உள்ள சீனியர் வீரர்கள் சரியாக விளையாட வில்லை என்பது தான். அதிலும் குறிப்பாக மூத்த வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், மேத்யூ வேட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனால் இந்த தோல்விக்கு பின்னர் தற்போது சீனியர் வீரர்கள் தங்களது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். அந்த வகையில் துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் அதன் பின்னர் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை ஆகியவற்றை கணக்கில் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் அவர் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டேவிட் வார்னர் கூறுகையில் : என்னுடைய கவனம் எல்லாம் தற்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் பக்கம் திரும்பி உள்ளது. அடுத்த இரண்டு உலக கோப்பையை கணக்கில் கொண்டு நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவுகளை எடுக்க உள்ளேன் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இப்படி வார்னர் ஓய்வு பெற காரணம் யாதெனில் : தற்போது 36 வயதாகும் வார்னர் அடுத்த டி20 உலக கோப்பைக்குள் 38 வயதை எட்டி விடுவார். இதன் காரணமாக உடல் தகுதியை அவர் பராமரிக்கவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. அதன்படி வார்னர் எதிர்வரும் ஆஷஸ் தொடரோடு வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : குருவுக்கு நிகரான சிஷ்யன், தோனியின் மேஜிக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர் – விவரம் இதோ

டேவிட் வார்னர் கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7817 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் 2-3 ஆண்டுகள் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாட ஆசைப்படுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement