என்னுடைய இந்த அனுபவம் தான் நேற்றைய போட்டிக்கான அதிரடிக்கு – ஆட்டநாயகன் டேவிட் மில்லர் பேட்டி

Miller
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாண்டியா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது பட்லர் மற்றும் சாம்சன் ஆகியோரது அதிரடி காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.

Jos Buttler 89

பின்னர் 189 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது குஜராத் அணியானது துவக்கத்தில் சாஹாவின் விக்கெட்டை முதல் ஓவரின் 2-வது பந்திலேயே இழந்தாலும் அதன்பின்னர் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். அவர்கள் இருவரும் தலா 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

எனவே குஜராத் அணி 85 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது கைகோர்த்த பாண்டியா மற்றும் மில்லர் ஆகியோரது ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்து குஜராத் அணி வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

Miller 2

இந்த போட்டியில் கேப்டன் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகனான டேவிட் மில்லர் அவரது அதிரடி குறித்து பேசுகையில் : இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. அணியில் எனது ரோல் என்ன என்பதை தெளிவாக கூறி இருந்தார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நான் போட்டிகளை முடித்துக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த பல ஆண்டுகளாகவே நான் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனவே இதுபோன்ற பிரஷரான சூழ்நிலைகளில் விளையாடிய அனுபவம் எனது அதிரடிக்கு கைகொடுத்தது. அதோடு இதுபோன்ற பெரிய போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்த போட்டியிலும் பெரிய இலக்கை நோக்கி அணியை கொண்டு சென்று வெற்றி பெற்று கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : இவ்ளோ ரன் அடிச்சும் நாங்க குஜராத் அணியிடம் தோற்க இதுவே காரணம் – சஞ்சு சாம்சன் வருத்தம்

நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை இந்த போட்டியில் விளையாடினேன். இந்த போட்டியில் என்னுடைய ஷாட்டுக்கள் அனைத்தையும் சரியாக கணித்தேன். அதுமட்டுமின்றி பந்து எனது அட்டாக்கிங் ரேஞ்சில் இருந்ததால் மிகவும் எளிதாக என்னால் விளாச முடிந்தது என மில்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement