நான் யாரென்று நிரூபிப்பேன். தோனி போன்று என்னால் இதை செய்ய முடியும் – டேவிட் மில்லர் சபதம்

Miller
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் சர்வதேச போட்டிகளில் தனது அதிரடி மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதுமட்டுமின்றி கடந்த 8 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அவர் பல போட்டிகளில் தனது அதிரடி காண்பித்து இங்கும் பல ரசிகர்களை சேகரித்துள்ளார்.

miller

- Advertisement -

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது ஆட்டம் மிகவும் மந்தமாக மாறி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த சில ஆண்டுகளாக தனது மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து மில்லர் வெளியேற்றப்பட்டார்.

எனவே இந்த தொடரில் எப்படியாவது தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று ராஜஸ்தான் அணியுடன் இணைந்து மில்லர் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தான் இந்த தொடர் குறித்தும், இந்த தொடரில் எவ்வாறு விளையாடுவது என்பது குறித்தும் அவர் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Miller

தோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாறோ அதே வழியில் நானும் பயணிக்க விரும்புகிறேன். அவர் அமைதியாக இருந்து ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றி பெற நினைக்கிறார். மேலும் அவர் தன்னை சித்தரிக்கும் விதம் மிகவும் சிறந்தது. அவரைப் போலவே செயல்பட விரும்புகிறேன். தோனியை போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனியை போன்றே பலம் பலவீனத்தை அறிந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து நானும் ஒரு சிறந்த பினிஷராக வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

Miller

மேலும் அவரைப் போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை விட சேஸிங்கில் அவரது நுணுக்கங்களை பின்தொடர்ந்து அவரைப் போன்றே வெற்றிகரமாக போட்டியைப் பினிஷிங் செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாக டேவிட் மில்லர் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement