அன்று ஏலத்தில் ஒதுக்கப்பட்ட மில்லர் ! இன்று குஜராத்தின் வெற்றி நாயகனாக படைத்த சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 24-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 3 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (26) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

Jos Buttler 89

- Advertisement -

அடுத்து களமிறங்கிய தேவதூத் படிக்க்ள் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (20) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்ரோன் ஹெட்மையர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அதுவரை பொறுமையாக பேட்டிங் செய்த பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக 12 பவுண்டரி 2 சிக்சருடன் 89 (56) ரன்கள் விளாசி ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 188/6 ரன்கள் எடுத்தது.

அசத்திய குஜராத்:
அதன்பின் 189 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரித்திமான் சஹா டக் அவுட்டாகி அதிர்ச்சியத்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் அடுத்து வந்த மேத்யூ வேட் உடன் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். ஒரு கட்டத்தில் அந்த இருவருமே தலா 35 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 85/3 என தடுமாறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா நங்கூரமாக நின்று அதிரடி காட்டிய நிலையில் அவருக்கு டேவிட் மில்லர் கை கொடுத்தார்.

Miller 1

அதில் மிரட்டலாக பேட்டிங் செய்த மில்லர் அரைசதம் கடந்து வெற்றியை நெருங்கிய நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 3 ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டல் பினிஷிங் கொடுத்து 3 பவுண்டரி 5 சிக்சருடன் 68* (38) ரன்களும் பாண்டியா 5 பவுண்டரியுடன் 40* (27) ரன்களும் எடுத்ததால் 19.3 ஓவரில் 191/3 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே லீக் சுற்றில் தொடர் வெற்றிகளால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் இந்த வெற்றியால் தனது அறிமுக சீசனிலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

மிரட்டல் மில்லர்:
மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்கள் எடுத்தாலும் பந்துவீச்சில் 103* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பாண்டியா – மில்லர் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுக்க தவறிய ராஜஸ்தான் பரிதாபமாக தோற்றது. இருப்பினும் அந்த அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் மே 27இல் குவாலிபயர் 2 போட்டியில் மோத உள்ளது. இந்த வெற்றிக்கு 68* (38) ரன்கள் குவித்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Miller 2

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் ஆரம்ப காலகட்டங்களில் ஐபிஎல் உட்பட அனைத்து போட்டிகளிலுமே மிரட்டலாக பேட்டிங் செய்து “கில்லர் மில்லர்” என்று ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். இருப்பினும் சமீப காலங்களில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பெரும்பாலான அணிகள் இவரை குறைத்து எடை போட்டதால் இந்த வருடத்திற்கான வீரர்கள் ஏலத்தில் 1 கோடி ரூபாய் அடிப்படையில் பங்கேற்ற அவரை முதல் சுற்றில் யாருமே வாங்கவில்லை.

- Advertisement -

சூப்பர் சாதனை:
இருப்பினும் 2-வது நாளில் கடைசி நேரத்தில் 2-வது சுற்றில் இவரை வாங்க இதே குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்ட நிலையில் இறுதியில் குஜராத் 3 கோடிக்கு வாங்கியது. அந்த நிலைமையில் இந்த வருடம் ஆரம்பம் முதலே அவருக்கு வாய்ப்பளித்த குஜராத் நிர்வாகத்துக்கு மிடில் ஆர்டரில் அட்டகாசமாக பேட்டிங் செய்து வரும் அவர் பினிஷராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சென்னைக்கு எதிராக தோற்க வேண்டிய போட்டியில் 94* விளாசி பெற்றுக்கொடுத்த வெற்றி உட்பட இதுவரை 15 போட்டிகளில் 449* ரன்கள் குவித்து குஜராத்தின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார்.

மேலும் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் 3 பந்தில் சிக்சர்களை பறக்கவிட்ட அவர் “ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றுகளில் கடைசி ஓவரில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பேட்ஸ்மென்” என்ற சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. டேவிட் மில்லர் – 18 ரன்கள், ராஜஸ்தானுக்கு எதிராக, 2022*
2. அல்பி மோர்கல் – 12 ரன்கள், பெங்களூருவுக்கு எதிராக, 2011
3. ப்ராட் ஹோட்ஜ் – 12 ரன்கள், ஹைதெராபாத்க்கு எதிராக,2013
4. எம்எஸ் தோனி – 12 ரன்கள், டெல்லிக்கு எதிராக, 2021

மேலும் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட கடைசி ஓவரில் 3 சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் எம்எஸ் தோனி (2016), ரஷித் கான் (2022), அக்சார் படேல் (2020) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். தனது சிறப்பான ஆட்டத்திற்கு குஜராத் அணி நிர்வாகம் தனது மீது வைத்த நம்பிக்கையும் ஆதரவுமே காரணம் என்று போட்டி முடிந்த பின் மில்லர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement