மயிரிழையில் உயிர் தப்பிய பந்துவீச்சாளர். முரட்டுத்தனமான ஷாட்டை அடித்த மில்லர் – அதிர்ச்சி வீடியோ

Miller

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்னும் சில தினங்களில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கும் இத்தொடர் 54 நாட்கள் நடைபெறும். இத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்தொடருக்கான முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

rr

இந்நிலையில் இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித், ஆர்ச்சர், பட்லர் ஆகியோர் இங்கி-ஆஸி இருதரப்பு தொடர் நடந்து வருவதால் முதல் வாரத்துக்கு பிறகு அணியுடன் இணைவார்கள் என்பதால் அவர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடவில்லை.

அவரைத் தவிர மற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். அந்த வகையில் கடந்த 8 ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த மில்லர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமாக ஆடிவருவதால் பஞ்சாப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதனை தொடர்ந்து அதிரடி வீரரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் தனது திறனை நிரூபித்தாக வேண்டிய சூழலில் உள்ள மில்லர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி குழுவில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தீவிரமான பயிற்சி மேற்கொண்ட மில்லர் அவருக்கு பந்துவீசிய சக வீரரான ராஜ்பூத்திற்கு எதிராக அடித்த ஷாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மில்லருக்கு வலைப்பயிற்சியில் வீசிய பந்தை நேராக அசுர வேகத்தில் அடித்தார். அந்த பந்து ராஜ்பூத்தின் தலைக்குமேல் மின்னல் வேகத்தில் பறந்தது. ராஜ்புட் சற்று உயரமானவர் என்பதால் பந்து அவரது தலைக்கு மிக அருகில் சென்றதும் அதனை கணித்த அவர் கணநேரத்தில் குனிந்து வர் அந்த பந்து தலையில் படுவதில் இருந்து தப்பித்தார்.

- Advertisement -

ஒரு வேளை பந்து அவரது தலை பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கூட யோசிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அசுர வேகத்தில் பந்து சீறிக்கொண்டு சென்றது. இந்த வீடியோவை தற்போது ராஜஸ்தான் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.