இந்திய அணியில் அவரோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பெரிய இழப்பு தான் – டேவிட் மலான் ஓபன்டாக்

David-Malan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது போட்டி நடைபெற உள்ள வேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த ஐந்தாவது போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற பரிசோதனையிலும் ரோஹித் சர்மாவிற்கு கொரோனா இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டிகள் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழி நடத்த இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளது.

indvseng

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் முடிவில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று மூன்றுக்கு ஒன்று (3-2) என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற ஆயுத்தமாக்கி வருகிறது.

அதேவேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது புத்துணர்ச்சி பெற்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முனைப்பு காட்டுவார்கள். எனவே இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Rohith

இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடாதது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான டேவிட் மலான் கூறுகையில் : ரோஹித் சர்மா போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் விளையாடாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய இழப்பு. அவரது இழப்பு என்பது எவ்வளவு பெரியது என்பதை காலம் தான் உணர்த்தும்.

- Advertisement -

இந்திய அணியில் அனுபவமிக்க பலவீரர்கள் மற்றும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பது பக்கபலமாக இருந்தாலும் ரோகித் சர்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று டேவிட் மலான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டிரா பண்ணலாம் நெனைக்கவே மாட்டோம். ஜெயிப்பது மட்டுமே ஒரே இலக்கு – இந்திய அணியின் இளம்வீரர் பேட்டி

ஏற்கனவே இங்கிலாந்து வந்திருந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை (3-1) என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய இங்கிலாந்து அணியானது தற்போது ஸ்டோக்ஸ் தலைமையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையான போட்டியினை அளிக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement