- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கும்ப்ளே கிடையாது.. முரளிதரன், வார்னேவுக்கு பின் அந்த பாகிஸ்தான் வீரர் 3வது சிறந்த ஸ்பின்னர்.. டேவிட் லாய்ட்

நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையின் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மகத்தான ஸ்பின்னர்களாக போற்றப்படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சிறந்த ஸ்பின்னராக போற்றப்படுகிறார். ஏனெனில் முத்தையா முரளிதரன் (800) மற்றும் ஷேன் வார்னே (708) ஆகியோருக்குப் பின் 619 விக்கெட்டுகளை சாய்த்துள்ள கும்ப்ளே உலகின் 3வது சிறந்த ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார்.

1990 – 2008 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த போட்டியில் அவர் 10 விக்கெட்டுகளையும் எடுத்து உலக சாதனையுடன் இந்தியாவை வெற்றி பெற வைத்தது மறக்க முடியாது. அந்த வகையில் கும்ப்ளே இந்தியாவின் சிறந்த லெக் ஸ்பின்னராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

கும்ப்ளே கிடையாது:
இந்நிலையில் தம்மை பொறுத்த வரை ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் ஆகியோருக்கு பின் அனில் கும்ப்ளே சிறந்த ஸ்பின்னர் கிடையாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார். மாறாக பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர் அப்துல் காதர் தான் 3வது சிறந்த ஸ்பின்னர் என்று அவர் பாராட்டியுள்ளார். அதற்கான காரணம் பற்றி டால்க்ஸ்போர்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“பாகிஸ்தானின் அப்துல் காதர் அழகான பவுலர். அற்புதமான கலைஞர். அவருடைய ரிதம் மற்றும் ஆக்சன் சிறப்பாக இருக்கும். பந்து வீசிக் கொண்டிருக்கும் போது அவரது மணிக்கட்டு மிகவும் கீழே இருக்கும். எனவே ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனுக்கு பின் அவர் எனது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அழகியல் ரீதியாக, லெக் ஸ்பின் மர்மம், கூக்லி அடிப்படையில் சிறந்த ஸ்பின்னர்கள் யார் என்பதை புள்ளிவிவரங்கள் கூறுவதில்லை”

- Advertisement -

“அனில் கும்ப்ளே உயரமானவர் வேகமாக வீசக்கூடியவர். அவர் கைகளை அதிகமாக பயன்படுத்துகிறார் இல்லையா? பெரிய நெம்புகோள்கள் மற்றும் அவரது வலது கையை முக்கியமாக வேகத்தில் சரி பார்க்கிறது. அவரிடம் ஒரு வளையம் இல்லை. அவருடைய பந்துகள் மிகவும் அதிக உயரத்தில் வருகிறது” என்று கூறினார். முன்னதாக 1977 – 1993 வரையிலான காலகட்டங்களில் அப்துல் காதர் பாகிஸ்தானுக்கு 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

இதையும் படிங்க: சதமடிச்சும் அநியாயமா இலங்கை தொடரில் கழற்றி விட்டாங்களே? என்ற கேள்விக்கு சஞ்சு சாம்சன் பதில்

அனில் கும்ப்ளே போலவே வலது கை லெக் ஸ்பின்னரான அவரும் 236 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதே போல 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 132 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இருப்பினும் அனில் கும்ப்ளேவை விட அப்துல் காதர் தம்மைப் பொறுத்த வரை சிறந்த ஸ்பின்னர் என்று டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -