கொல்கத்தா அணியில் மெக்கல்லம் உடன் பணியாற்ற ஆவலாக உள்ளேன் – ஐ.பி.எல் குறித்த அனுபவத்தை பகிர்ந்த முன்னாள் ஆஸி வீரர்

மார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோன வைரஸ் காரணமாக தற்போது பெரும் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் அனைத்தும் துபாய் மைதானங்களில் நடைபெறும் செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தை ஐபிஎல் தொடரில் எடுத்துக் கொண்டுள்ளது.

ipl

இதற்காக டி20 உலக கோப்பை தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் வெளிநாட்டு வீரர்களை எப்படி ஐபிஎல் தொடர் நடக்கும் நாட்டிற்கு அழைத்து வருவது என பிசிசிஐ கடுமையாக யோசித்து வருகிறது. ஒருபக்கம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் வெளிநாட்டு வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அந்த அணியின் ஆலோசகராக பணியாற்ற இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஹஸி இந்த தொடர் குறித்த ஆரவாரத்தை தனது கருத்தாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Hussey

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏற்கனவே விளையாடியுள்ளது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இப்போது நான் புதிய பொறுப்பில் ஆலோசகராக கொல்கத்தா அணியுடன் இணைந்து இருக்கிறேன். அவர் பயிற்சியாளராக இருக்கும் அணியின் ஆலோசகராக பணியாற்ற ஆர்வமுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Hussey Brothers

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸியின் உடன் பிறந்த சகோதரரான டேவிட் ஹஸ்ஸி ஐ.பி.எல் தொடரில் விளையாடியது மட்டுமின்றி தற்போது தான் விளையாடிய அணிகாக்காவே பேட்டிங் பயிற்சியாளராகவே செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.