Aadhar Card : பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – இந்த தேதிக்குள் இணைக்க வேண்டும்

Pan-Card
- Advertisement -

அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த இந்திய அரசு இந்திய முழுவதும் கொண்டுவந்த திட்டமே ஆதார் அட்டை திட்டம். இந்த ஆதார் அட்டை ஆனது ரேஷன் கார்டு போன்று அனைவரும் தங்களிடம் வைத்திருக்க வேண்டிய ஒரு அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறியுள்ளது.

Pan 1

இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் அட்டையின் தேவை அத்தியாவசமாகி உள்ளது. எந்த ஒரு அடையாளச்சான்றிற்கும் ஆதார் இன்று முக்கியமாகி உள்ளது. குறிப்பாக புதிய மொபைல் நம்பர், கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற பல பயன்பாட்டிற்கு இன்று ஆதார் எண் பயன்படுத்தப்படுவது கட்டாயமாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அரசு ஏற்கனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக்கொண்டது. அதற்காக ஏற்கனவே 5 முறை காலக்கெடுவினை அரசு அளித்தது. ஆனாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கடைசி கெடுவினை வைத்துள்ளது.

Pan

அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பான் கார்டில் இணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பான் கார்டு செல்லாமல் போகும் என்றும், மேலும் புதிதாக பான் கார்டினை பெற விண்ணப்பிக்கவும் முடியாது என்றும் எச்சரித்துள்ளது.

Advertisement