ஈஸியா ஜெயிக்க வேண்டிய இந்த மேட்சை நாங்க தோக்க இவர் மட்டும் தான் காரணம் – இலங்கை கேப்டன் புலம்பல்

Shanaka
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை 65 ரன்களில் இழந்து தடுமாறியது. இதன் பின்னர் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் என்று நினைத்த நிலையில் மனிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

deepak

- Advertisement -

அதன் பின்னர் பாண்டியாவும் டக் அவுட்டாகி செல்ல இனி போட்டி அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்து விட்டனர். அப்போது இக்கட்டான வேளையில் க்ருனால் 35 ரன்கள் எடுத்து ஓரளவு ரன்களை சேர்த்தார். பின்னர் இறுதியில் விளையாடிய தீபக் சாஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக இருந்த புவனேஸ்வர் குமார் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இறுதியில் 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்து இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் போட்டி முடிந்து இன்று தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த போட்டி உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி எங்களிடமிருந்து இந்த எளிதான வெற்றியை பறித்தது தீபக் சாஹர் மட்டும்தான்.

deepak 1

அவர் இந்த போட்டியை எங்களிடம் இருந்து அப்படியே கொண்டு சென்றுவிட்டார். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கியிருந்தாலும் இடையில் நிறைய விக்கட்டுகளை விட்டுவிட்டோம். பேட்டிங் பவர் பிளே வில் இன்னும் நாங்கள் சற்று சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

deepak 2

அவர் கூறியது போலவே இந்த போட்டியை இலங்கை அணியிடம் இருந்து தனியாளாக தீபக் சாகர் தான் மீட்டார் என்றே கூறலாம். ஏனெனில் பந்து வீச்சின் போது இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் பேட்டிங்கிலும் இக்கட்டான வேளையில் எட்டாவது வீரராக களம் இறங்கி துவக்கத்தில் நிதானமாக விளையாடினாலும் பின்னர் வெற்றிக்கு தேவையான நேரத்தில் அதிரடி காண்பித்து 82 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என ஆட்டமிழக்காமல் 69 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement