IND vs SL : இது நாங்க ஜெயிச்சிருக்க வேண்டிய மேட்ச். கஷ்டமா இருக்கு – தோல்விக்கு பின் தசுன் ஷனகா வருத்தம்

Shanaka
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜனவரி 3-ஆம் தேதி இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

IND vs SL

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக தீபக் ஹூடா 41 ரன்களையும், இஷான் கிஷன் 37 ரன்களையும், அக்சர் படேல் 31 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை அடித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Shivam Mavi

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : நாங்கள் வெற்றியை பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது. இந்த போட்டியின் இறுதி நேரத்தில் நாங்கள் தோல்வியை சாதித்தது ஏமாற்றம் அளிக்கிறது.

- Advertisement -

வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும். இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. அதன் காரணமாகவே இந்திய அணி சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தாலும் எங்களால் இந்திய அணியை 162 ரன்களில் சுருட்ட முடிந்தது.

இதையும் படிங்க : IND vs SL : இலங்கை அணிக்கெதிரான வெற்றி குறித்து ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன? – விவரம் இதோ

இருந்தாலும் இது இந்த தொடரின் முதல் போட்டி தான். இனிவரும் போட்டிகளில் நாங்கள் இன்னும் பலமாக திரும்பி வெற்றிப்பாதைக்கு திரும்புவோம். இந்திய அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் இளம்வீரர்களாகவும், நல்ல பேட்டிங் வரிசை உடைய அணியாகவும் இருக்கின்றனர் என தசுன் ஷனகா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement