- Advertisement -
உலக கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் படு மோசமான சாதனையை நிகழ்த்திய தசுன் ஷானகா – விவரம் இதோ

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய முக்கிய ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மற்றும் பால் ஸ்டெர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் மோதியிருந்தன. சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி விளையாடியதால் நினைத்தபடியே போட்டியில் பெரும்பாலும் இலங்கை அணியே முழுக்க முழுக்க ஆதிக்கத்தை செலுத்தியது.

தசுன் ஷனகா நிகழ்த்திய மோசமான சாதனை :

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குஷால் 56 ரன்களையும், கமிண்டு மெண்டிஸ் 44 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தாலும் முக்கிய வீரராக விளையாடிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் மோசமான சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : உங்களுக்கு என் சேவை வேணுமா? நான் தயாரா இருக்கேன்.. நேபாள் அணியை ஊக்கப்படுத்திய – டேல் ஸ்டெயின்

அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் ஏழாவது வீரராக களமிறங்கிய அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டாகிய வீரர் என்ற சாதனையை ஷனகா நிகழ்த்தியுள்ளார். இலங்கை அணிக்காக இதுவரை 113 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 16 முறை டக் அவுட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -