திடீரென பிளைட்டில் ஏறாத இலங்கை அணியின் கேப்டன். புதிய கேப்டனாக மேத்யூஸ் நியமனம் – காரணம் இதுதான்

Shanaka
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மூன்று டி20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுத்து விளையாடவுள்ளது. இதில் இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 போட்டி வருகின்ற 3ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை வீரர்கள் வெஸ்ட் இண்டீசக்கு புறப்பட ஆயுத்தமாகினர். கடைசி நேரத்தில் இலங்கை அணியின் டி20 கேப்டன் ஷனகாவால் பிளைட் ஏற முடியவில்லை.

SL

- Advertisement -

இதனிடையில் இலங்கை ரசிகர்கள் அனைவரும் ஷனகா ஏன் பிளைட் ஏறவில்லை என்று கேள்வி எழுப்பினர்.இந்த கேள்வி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை விட்டுள்ளது.
ஷனகா கடைசி நேரத்தில் அவர் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை தொலைத்து விட்டார். இதினிடையில் அவசர அவசரமாக புதிய விசா மற்றும் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்ய முடியாது.சிறிது கால அவகாசம்தேவைப்படும்.

எனவே டி20 அணிக்கு மேத்தீவ்ஸ் புதிய கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார். பாஸ்போர்ட் மற்றும் விசா பிரச்சனை முடிந்ததும் ஷனகா அணியில் கலந்து கொள்வார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அதில் குறிப்பபிட்டுள்ளது. முதலில் இலங்கை அணியின் டி20 கேப்டனாக லசித் மலிங்காதான் வழி நடத்தி வந்தார்.

Shanaka 2

ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் பயிற்சி முகாமில் சரிவர பங்கேற்காததால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி டி20 அணியின் புதிய கேப்டனாக தசுன் ஷனகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.25 வயதாகும் ஷனகா 40 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.ஷனகா நல்ல டி20 கேப்டன் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு யாதெனில்

mathews

2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக ஷனகா பொறுப்பேற்று அந்த தொடரை 3 – 0 என்ற கணக்கில் அபாராமாக வெற்றி பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் ஷனகா இல்லாமல் இலங்கை வெற்றி பெறுமா என்கிற கேள்வி இலங்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement